
நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் நேற்று இணையத்தில் திருட்டுத்தனமாக கசிந்தது. மேலும் சில சமூக ஊடகங்களிலும் இப்படக் காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இது திரையுலகினரை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது குறித்து இப்பட இசையமைப்பாளர் அனிருத் ட்வீட் செய்துள்ளார். அதில்...
"இது 1,000 நபர்களின் கடின உழைப்பு. தயவுசெய்து கசிந்த எந்தக் காட்சிகள் குறித்தும் உடனடியாக report@blockxpiracy.com என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்" எனப் பதிவிட்டுள்ளார்.
Follow Us