இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் படம் பேட்ட. இப்படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிகின்றனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. பொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசத்துடன் இது போட்டிப்போட உள்ளது. இதுவரை இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு மரண மாஸ் என்னும் குத்து பாடல் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.
மேலும் இந்த பாடலை சமூக வலைதளத்தில் தலைவர் குத்து என்று ட்ரெண்டும் செய்தது. இந்த பாடல் மாலை வெளியாக இருக்கும் நிலையில், இந்த பாடலை அனிருத் இசை அமைத்த மேகிங் வீடியோவை ஸ்னீக் பீக்காக தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் தர லோக்கலாக தோள் வாத்தியத்தில் இசை தெரிக்கிறது. வீடியோவில் இசை சில நொடிகளே என்றாலும் மனதில் டப்பென்று பதிந்துவிடுகிறது அந்த இசை. வீடியோ இறுதியில், இப்படி ஒரு ரெக்கார்டிங் வேர்ல்டுலையே நடந்தது இல்லை என்று அனிருத் கூறியுள்ளார்.