Advertisment

“உடனடியாக ஈஸ்வரன் டீஸர் பரப்புவதை நிறுத்த வேண்டும்” -படக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்த விலங்குநல வாரியம்

simbu

Advertisment

லாக்டவுன் முடிந்து திரைப்பட ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைத்ததும் மாநாடு பட ஷூட்டிங்கில் சிம்பு கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற பட ஷூட்டிங்கில் நடிக்க கலந்துகொண்டார். லாக்டவுனில் தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து சிம்பு தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறினார்.

மேலும், அந்த ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரில் பாம்பை கழுத்தில் வைத்துக்கொண்டு போஸ் தருவார் சிம்பு. இதனையடுத்து படத்தின் ஷூட்டிங்கில் பாம்பை பிடிப்பதுபோன்ற காட்சி லீக்காகி சர்ச்சையை ஏற்படுத்தியது. விலங்குகள் நலவாரியத்திடம் மர்ப நபர் ஒருவர் புகாரளித்திருந்தார். உடனடியாக இதற்கு ஈஸ்வரன் படக்குழு, “அது பிளாஸ்டிக் பாம்பு, படத்தில் கிராஃபிக்ஸ் காட்சியாக இடம்பெற உள்ளது” என்று விளக்கமளித்தது.

இந்நிலையில் ஈஸ்வரன் படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரில் கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் பாம்பினை, இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெறாமல் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

Advertisment

இது Performing Animals (Registration) Rules, 2001 என்கிற விதியை மீறிய செயலாகும். எனவே, உடனடியாக இந்த ட்ரெய்லர் மற்றும் போஸ்டர் பரப்புவதை நிறுத்த வேண்டும், இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள், ஏன் உரிய அனுமதி பெறவில்லை என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

Simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe