Skip to main content

குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோயின் ; வேகமெடுக்கும் அனிகா கேரியர்

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Anikha Surendran makes his debut as heroine in Oh My Darling movie

 

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான அனிகா தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு தமிழில் தொடர்ந்து 'விஸ்வாசம்', 'மாமனிதன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் 'கண்ணானே கண்ணே' பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

 

இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா தற்போது கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். மலையாளத்தில் 'ஆஷ் ட்ரீ வென்ச்சர்ஸ்' தயாரிப்பில் ஆல்ஃப்ரெட் சாமுவேல் இயக்கத்தில் உருவாகும் 'ஓ மை டார்லிங்' படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் மெல்வின் ஜி பாபு, முகேஷ், லீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள அனிகாவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனுஷ் படம் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் அனிகா

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
anikha surendran to debut as heroine

2017 ஆம் ஆண்டு வெளியான 'ப.பாண்டி' படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த தனுஷ், அதைத் தொடர்ந்து 'நான் ருத்ரன்' என்ற தலைப்பில் ஒரு படம் தொடங்கியதாகவும் அதில் நாகர்ஜுனா, அதிதி ராவ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்து வந்ததாகவும் சொல்லப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து, பின்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து தனது 50வது படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் தனுஷ் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முழுவதும் சமீபத்தில் முடிவடைந்தது.  

இந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தை தனுஷ் இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவரது அக்கா மகன் ஹீரோவாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருவதாக பேசப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக அனிகா நடிப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான அனிகா, தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு தமிழில் தொடர்ந்து விஸ்வாசம், மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஹீரோயினாக உருவெடுத்தார். தெலுங்கு, மற்றும் மலையாளத்தில் ஏற்கனவே ஹீரோயினாக அறிமுகமான நிலையில், தற்போது தனுஷ் இயக்கும் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தெரிகிறது.

Next Story

அந்த ஆபாச வீடியோவில் இருப்பது நானா..? - நடிகை அனிகா விளக்கம்!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

gfbxbf

 

அஜித் படங்களான 'என்னை அறிந்தால்' மற்றும் 'விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்துப் பிரபலமான குழந்தை நட்சத்திரம் அனிகா. இவர் கருப்பு நிற உடையணிந்து ஆபாசமாக நடனமாடுவது போல் ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த விடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இதுகுறித்து நடிகை அனிகா விளக்கம் அளித்துள்ளார். அதில்...

 

"நான் கருப்பு உடையில் நடனமாடுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வலம் வந்துகொண்டிருக்கிறது. அது நான் அல்ல. மார்ஃப் செய்து வெளியிடப்பட்டுள்ளது. எனக்கும் அந்த வீடியோவை சிலர் அனுப்பி விசாரித்தனர். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முதலில் நான் பார்க்கும்போதுகூட எனக்கும் அது நிஜ வீடியோவைப் போலவே தோன்றியது. அவ்வளவு துல்லியமாக மார்ஃபிங் செய்துள்ளனர். இந்த வீடியோவை இணையத்திலிருந்து நீக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்திருக்கிறோம். ஏனென்றால் அது பார்க்க உகந்த வீடியோ அல்ல. நீங்களும் அந்த வீடியோ குறித்து புகார் தெரிவித்து அதை நீக்க உதவினால் நன்றாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.