Advertisment

தனுஷ் படம் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் அனிகா

anikha surendran to debut as heroine

Advertisment

2017 ஆம் ஆண்டு வெளியான 'ப.பாண்டி' படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த தனுஷ், அதைத்தொடர்ந்து 'நான் ருத்ரன்' என்ற தலைப்பில் ஒரு படம் தொடங்கியதாகவும் அதில் நாகர்ஜுனா, அதிதி ராவ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்து வந்ததாகவும் சொல்லப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து, பின்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து தனது 50வது படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் தனுஷ் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முழுவதும் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தை தனுஷ் இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவரது அக்கா மகன் ஹீரோவாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருவதாக பேசப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக அனிகா நடிப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான அனிகா, தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு தமிழில் தொடர்ந்து விஸ்வாசம், மாமனிதன்உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஹீரோயினாக உருவெடுத்தார். தெலுங்கு, மற்றும் மலையாளத்தில் ஏற்கனவே ஹீரோயினாக அறிமுகமான நிலையில், தற்போது தனுஷ் இயக்கும் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தெரிகிறது.

actor dhanush anikha surendran
இதையும் படியுங்கள்
Subscribe