gfbxbf

Advertisment

அஜித் படங்களான 'என்னை அறிந்தால்' மற்றும் 'விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்துப் பிரபலமான குழந்தை நட்சத்திரம் அனிகா. இவர் கருப்பு நிற உடையணிந்துஆபாசமாகநடனமாடுவது போல் ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த விடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இதுகுறித்து நடிகை அனிகா விளக்கம் அளித்துள்ளார். அதில்...

"நான் கருப்பு உடையில் நடனமாடுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வலம் வந்துகொண்டிருக்கிறது. அது நான் அல்ல. மார்ஃப் செய்து வெளியிடப்பட்டுள்ளது. எனக்கும் அந்த வீடியோவை சிலர் அனுப்பி விசாரித்தனர். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முதலில் நான் பார்க்கும்போதுகூட எனக்கும் அது நிஜ வீடியோவைப் போலவே தோன்றியது. அவ்வளவு துல்லியமாக மார்ஃபிங் செய்துள்ளனர். இந்த வீடியோவை இணையத்திலிருந்து நீக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்திருக்கிறோம். ஏனென்றால் அது பார்க்க உகந்த வீடியோ அல்ல. நீங்களும் அந்த வீடியோ குறித்து புகார் தெரிவித்து அதை நீக்க உதவினால் நன்றாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.