விஸ்வாசத்தில் அஜித்துடன் இரண்டாவது முறையாக இணையும் நாயகி 

mr.chandramouli

anika

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சிவா இயக்கும் 'விஸ்வாசம்' படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா டாக்டராக நடிப்பதாக சமீபத்தில் கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. 'என்னை அறிந்தால்' படத்தில்குழந்தை நட்சத்திரமாக இருந்து அஜித்துக்கு மகளாக நடித்துஇப்பொழுது இளம் நாயகியாக வளம் வரும்அனிகா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் கௌதம் மேனனின் 'ஒன்றாக' தயாரிப்பில் இவர் நடித்த குறும்படமான 'மா' பெரிதும் பேசப்பட்டது.

anikha now

'விஸ்வாசம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

ajith siva viswasam sathyajothifilms
இதையும் படியுங்கள்
Subscribe