“இனிமேல் நடக்கக்கூடாது” - அலுவலகம் புகுந்து அல்லு அர்ஜூன் ரசிகர்கள் அடாவடி

Angry Allu Arjun fans threat youtube channel

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் 17ஆம் தேதி மாலை வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ரெட் டிவி என்ற யூட்யூப் சேனலில், அல்லு அர்ஜூனை குறித்து தவறுதலாக வீடியோ பதிவிட்டதாக அந்த சேனலின் அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கூறியதாவது, “கடந்த சில மாதங்களாக நாங்கள் ரெட் டிவியை பார்த்து வருகிறோம். அதில் அல்லு அர்ஜூனுக்கு எதிராக அவர்கள் வீடியோ வெளியிட்டு வந்தனர். இப்போது அல்லு அர்ஜூன் மட்டும் அல்லாது அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளை வீடியோவில் பயன்படுத்தி எல்லைகளை கடந்துள்ளனர்.

மேலும் அல்லு அர்ஜூனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர். அதனால் சமூக ஊடகங்களை பாதுகாப்பாக மாற்ற அந்த வீடியோக்களை நீக்க சொல்லி கேட்டுக் கொண்டோம். அதோடு இது போல் இனிமேல் வீடியோ உருவாக்காதீர்கள் என எச்சரித்தோம்” என்றனர். மேலும் சமூக ஊடகங்களை பாதுகாப்பான இடமாக மாற்றுவோம் என கூறியுள்ளனர். இதையடுத்து அந்த வீட்யோக்கள் டெலிட் செய்யப்பட்டு, யூட்யூப் சேனல் சார்பில் அலுவலகம் வந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

allu arjun
இதையும் படியுங்கள்
Subscribe