/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1415_0.jpg)
அனீசியாஎன்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராகஅறிமுகமானார் சரத் சந்திரன். இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இயக்குநர்லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் வெளியான அங்கமாலீடைரீஸ்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி பெரும் ஹிட்டடித்ததைதொடர்ந்து, நடிகர் சரத் சந்திரனுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. இதன் மூலம் கூட, சி.ஐ ஏ(CIA) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சரத் சந்திரன்(37) நேற்று(30.7.2022) திடீரென உயிரிழந்துள்ளார். ஆனால் இறப்பிற்கான காரணம் குறித்து எந்தவிதமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இவரின்மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)