Android Kunjappan

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைவசம் வைத்துள்ள இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பைத் தனது உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் ஆகியோருக்கு வழங்கினார்.

Advertisment

தமிழில் ‘கூகுள் குட்டப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பூஜையுடன் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்றுவந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில், 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான இந்தி ரீமேக் உரிமையைஃபைத் ஃபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தி ரீமேக்கில் நடிகர் அனில் கபூரை நாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

Advertisment