Skip to main content

இந்திய சினிமாவில் கால் பதிக்கும் ரஸ்ஸல்...

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

நேற்றுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. மும்பை, சென்னை, டெல்லி, ஹைதரபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 
 

russell

 

 

நேற்று நடைபெற்ற போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின, கேகேஆர் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் தகுதி பெற்றிருக்கும். ஆனால், அந்த அணியின் நாயகனான ரஸ்ஸல் நேற்று பூஜியம் ரன்னில் ஆட்டமிழக்க கேகேஆர் அணியால் ஒரு மிகப்பெரிய ஸ்கோரை பெற முடியவில்லை. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாகி வெற்றிபெற்று. பட்டியலில் முதலிடம் பிடித்துவிட்டது மும்பை அணி.
 

முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் நாளை மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் டெல்லி-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
 

கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது கொல்கத்தா அணி. வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஆண்ட்ரு ரசல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்துள்ளார். இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 

அந்த பதிவில், ‘இந்தி பாடல் ஒன்றின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளேன். அந்த பாடல் விரைவில் வெளியாகும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்; ஆதரவளித்த ரஸ்ஸல்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

shah rukh khan

 

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் போட்டிகள், கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய (13.04.2021) போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்ய குமார் யாதவ், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, சிறப்பாக விளையாடியது. ஒருகட்டத்தில் 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கொல்கத்தா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதிக்கட்டத்தில் மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியைத் தழுவியதால், கொல்கத்தா அணியின் ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான், அணியின் தோல்வி குறித்து, “ஏமாற்றமளிக்கும் செயல்பாடு. ரசிகர்களிடம் கொல்கத்தா அணி அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறது" என தெரிவித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து ஷாருக்கானின் ட்வீட் குறித்து, கொல்கத்தா வீரர் ரஸ்ஸலிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நானும் அந்த டிவீட்டிற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். ஆனால் நாளின் முடிவில், கிரிக்கெட் ஆட்டத்தில், என்ன நடக்குமென்பது ஆட்டம் முடியும்வரை உங்களுக்குத் தெரியாது. நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். வீரர்களை பற்றி நான் பெருமைப்படுகிறேன். உங்களுக்குத் தெரியும், நாங்கள் நிச்சயமாக ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் இது உலகத்தின் முடிவு அல்ல. இது இரண்டாவது போட்டி மட்டுமே. இதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளப் போகிறோம்" என தெரிவித்தார். 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த கிறிஸ் கெயில், ரஸ்ஸல்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

gayle -russell

 

இந்தியாவில் ‘கோவாக்சின்’, ‘கோவிஷீல்ட்’ என்ற இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் வங்கதேசம், ஜிம்பாப்வே உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்தியா கரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

 

அந்த வகையில் மேற்கிந்திய தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவிற்கு, இந்தியா தடுப்பூசிகளை வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஜமைக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரும் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து கிறிஸ் கெயில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "ஜமைக்காவிற்கு தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடி, இந்திய அரசு, இந்திய மக்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்" என கூறியுள்ளார்.

 

அதேபோல் ஆண்ட்ரே ரஸ்ஸல் வெளியிட்டுள்ள வீடியோவில், "பிரதமர் மோடி மற்றும் இந்திய தூதரகத்திற்குப் பெரிய நன்றி சொல்ல விரும்புகிறேன். தடுப்பூசிகள் இங்கே உள்ளன. நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். உலகம் இயல்பு நிலைக்குச் செல்வதை நான் காண விரும்புகிறேன். ஜமைக்கா மக்கள் அதை மிகவும் பாராட்டுகிறார்கள். இந்தியாவும் ஜமைக்காவும் இப்போது சகோதரர்கள்" என தெரிவித்துள்ளார்.