ngchd

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளதால் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் காவல்துறையினரில் 75-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவர்கள் தன்னலமின்றி நேரம், காலம் பார்க்காமல் பணி செய்து கொண்டிருப்பதற்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். நேற்று நடிகர் சூரி காவல் நிலையம் சென்று கலவலர்களுக்கு நன்றி தெரிவித்து ஆட்டோகிராஃபும் வாங்கியது பரவலாக பாராட்டப்பட்டது.

Advertisment

Advertisment

இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா காவல்துறையினரின் சேவையைப் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்.. "நாட்டுக்காகவும், எங்கள் அனைவருக்காகவும் கடினமாக உழைக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. வைரஸை எதிர்த்துக் கடுமையாகப் போராடிவருகிறீர்கள். நம்பிக்கை இழந்து விடாதீர்கள். எல்லாம் சரியாகும். அனைத்தும் மீண்டும் நல்லபடியாக மாறும் என்று நம்புகிறோம். நன்றி'' எனக் கூறியுள்ளார்.