Advertisment

ரசிகர்களை மிரட்டும் ஆண்ட்ரியா; கவனம் ஈர்க்கும் 'கா' படத்தின் ட்ரைலர்

Andrea Jeremiah starring kaa movie trailer goes viral

Advertisment

தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும்அசத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின்இயக்கும் 'பிசாசு 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும்,இயக்குநர் நாஞ்சில் இயக்கும் 'கா' என்ற படத்திலும்நடித்துள்ளார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியாகாட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில்நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க காட்டின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சலீம் ஹவுஸ், புகழ் கமலேஷ், 'சூப்பர் டீலக்ஸ்' பட புகழ் நவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்துள்ளனர்.ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ்இப்படத்தைத்தயாரித்துள்ளார். படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் 'கா' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர்பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின்ட்ரைலர்பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது.இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Advertisment

Andrea Jeremiah tamil cinema
இதையும் படியுங்கள்
Subscribe