/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-6_2.jpg)
தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மிஷ்கின் . இவர் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிசாசு 2' படத்தை இயக்கிமுடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் 'பிசாசு 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கமான மிஷ்கின் பட பாணியில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளிவந்துள்ள இந்த டீரில் வசனம் எதுவும் இடம்பெறவில்லை. ஆண்ட்ரியாவின் ஸ்கிரின் ப்ரசன்ஸ் பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)