style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் தயாரிக்கும் படம் புரொடக்ஷன் நம்பர் 2. ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கன்னடத்தில் ‘தில்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய 'தில்' சத்யா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். சென்னை, கொச்சின், பரோடா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.