'பிகில்' படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது தலைநகர் டெல்லியில் தொடங்கியுள்ளது.

andrea

Advertisment

Advertisment

விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் தற்போது புதிய வரவாக நடிகை ஆண்ட்ரியா இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாகவும், டெல்லியில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.