/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/59_5.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சைக்கோ. அப்படத்தினைத் தொடர்ந்து, பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். நடிகை ஆண்ட்ரியா மையக்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று முன்தினம் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலான இப்படம் குறித்த ரகசியத்தை, நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இப்புகைப்படத்தின் இடது புறத்தில் இருப்பது எனது தாய்வழி பாட்டி. இது அவரது இளமை காலத்தில் எடுக்கப்பட்டது. தனது இருண்ட பொன்னிற முடி மற்றும் சாம்பல் நீல கண்களால் அவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பது போல தோன்றியது இல்லை. இயக்குனர் மிஷ்கின் என்னிடம் கதை கூறிய போது, அக்கதாபாத்திரத்திற்கும் எனது குடும்பவழிக்கும் இடையேயான ஒற்றுமையை யோசித்து பார்த்தேன். அதன்பின், இந்த புகைப்படத்தைத் தேடி எடுத்து அவருக்கு அனுப்பினேன். இதைப் பார்த்தவுடன் ஃபோன் செய்த மிஷ்கின், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக இதை மறுவுருவாக்கம் செய்யப்போகிறேன் என்றார். அப்படித்தான் இது நடந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)