Advertisment

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கௌரவிக்கும் ஆந்திர அரசு..

spb

"பாடு நிலா பாலு"எனஅன்போடு அழைக்கப்படும் அளவிற்கு, தனதுதேன்மதுரக் குரலால், ரசிகர்களின் மனதைக்கொள்ளை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். உடல்நலம்பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி, கடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.

Advertisment

ஆந்திர மாநிலம் நெல்லூரைப் பூர்விகமாகக்கொண்டவர்எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஏற்கனவே ஆந்திரமுதல்வர் ஜெகன்மோகன்,எஸ்.பி.பாலசுப்ரமணியதிற்கு 'பாரத ரத்னா' வழங்கவேண்டுமென பிரதமருக்குக் கடிதம் எழுதினார். தற்போது, ஆந்திர அரசு, நெல்லூரில் உள்ள இசை மற்றும்நாட்டியப் பள்ளிக்குஎஸ்.பி.பாலசுப்ரமணியதின் பெயரைச்சூட்ட முடிவு செய்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக, ஆந்திராவின் தொழில், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரானகௌதம் ரெட்டி, தனது ட்விட்டர் பதிவில், "மாபெரும் பாடகரானஎஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை அங்கீகரிக்கும் விதமாக, அரசு இசை மற்றும் நாட்டியப் பள்ளியின் பெயரை, 'டாக்டர்எஸ்.பி.பாலசுப்ரமணியம் அரசு இசை மற்றும் நாட்டியப் பள்ளி' என மாற்றஅரசுமுடிவு செய்துள்ளது" எனக் கூறியுள்ள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியதின் மகன் சரண், இந்த கௌரவத்திற்காக, ஆந்திர அரசுக்கும், முதல்வர் ஜெகன் மோகனுக்கும் நன்றியுடன் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

jeganmohan reddy spb
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe