andhra cm Jagan Mohan Reddy invites vishal to meet

ராணா புரொடக்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'லத்தி' படம் இன்று (22.12.2022) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் விஷாலை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புவரும் 27 ஆம் தேதி விஜயவாடாவில் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 'லத்தி' படத்தின் புரோமோஷனுக்காக கடந்த 19 ஆம் தேதி ஆந்திரா சென்ற விஷாலுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதனிடையே ஒரு புரோமோஷன் நிகழ்ச்சியில், "நான் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை. ஒரு எம்.எல்.ஏ. சம்பாதிக்கும் பணத்தை விட என் படங்களில் அதிகம் சம்பாதிக்கிறேன். இப்போதைக்கு அரசியலுக்கு வரும் ஆர்வம் இல்லை" எனத்தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.