ADVERTISEMENT

"இவ்வுலகை விட்டு அவர் பிரிந்திருப்பது வருத்தமளிக்கிறது" - பிரபல நடிகர் மறைவுக்கு ஆந்திர முதல்வர் இரங்கல்

06:10 PM May 22, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப்பிரவேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பின்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இத்தகவலுக்கு விளக்கமளித்த அவரது குடும்பத்தினர் உடல்நிலை தேறி வருவதாக கூறினர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு தற்போது உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன், "கதாநாயகன், வில்லன், துணை நடிகர் என அனைத்து விதமான வேடங்களிலும் நடித்து தெலுங்கு திரையுலகில் தனி அங்கீகாரம் பெற்ற மாபெரும் நடிகர் சரத்பாபு. இன்று அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்திருப்பது வருத்தமளிக்கிறது. சரத்பாபுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என தெரிவித்துள்ளார். மேலும் திரை பிரபலங்கள் பிரகாஷ் ராஜ், ராதிகா, கஸ்தூரி உள்ளிட்ட பலர் ட்விட்டரில் இரங்கல் பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT