Advertisment

ஆந்திர முதலமைச்சராக தெலுங்கில் நேரடியாக களமிறங்கும் ஜீவா

andhra cm jagan mogan reddy biopic starring jiiva, mammooty yatra 2 first look released

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதனை இயக்குநர் மஹி விராகவ் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் நிலையில், ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரில் ஜீவாவும், மம்மூட்டியும் இருக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

ஜீவா, இதுவரை தெலுங்கில் ஆர்யாவின் 'சைஸ் ஜீரோ' (தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற தலைப்பில் வெளியானது) மற்றும் வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதையடுத்து முதல் முதலாக முதன்மை கதாபாத்திரத்தில் இந்தப் படம் மூலம் அறிமுகமாகவுள்ளதாகத்தெரிகிறது.

tollywood Mammootty jiiva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe