விஜய்யின் பிகில் படத்திற்குப் பிறகு இயக்குனர் அட்லீ அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் ஹிந்தி படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் இவர் அடுத்ததாக 'அந்தகாரம்' என்ற படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_121.jpg)
அட்லீ தயாரிப்பில் ஏற்கனவே 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படம் சென்ற 2017-ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் தயாரிக்கும் இரண்டாவது படமாக 'அந்தகாரம்' படம் அமைந்துள்ளது. விக்னராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இசையமைக்கும் இப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)