எம்.சுந்தர் இயக்கத்தில் முரளிக பீர்தாஸ் தயாரித்துள்ள படம் ‘அந்த 7 நாட்கள்’. இப்படத்தில் அஜித் தேஜ், ஸ்வேதா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய்உள்பட பலர் நடித்துள்ளனர். சச்சின் சுந்தர் இசையமைத்துள்ள இப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.
படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என தயாரிப்பாளர் என்னிடம் சொன்னார். அதனால் நூறுசதவிதம் நேர்மையாக இந்த படத்தை வித்தியாசமான முறையில் எடுத்துள்ளேன். இது ஒரு காதல் கதை, பாக்கியராஜிடம் நான் வேலை பார்த்துள்ளேன். அதனால் குருநாதரின் பட டைட்டிலை பயன்படுத்துக் கொள்லலாம் என டார்லிங் டார்லிங் டார்லிங் மற்றும் அந்த 7 நாட்கள் என இரண்டு டைட்டிலை தேர்வு செய்து வைத்திருந்தேன்.
பின்பு குருநாதரிடம் கதை சொன்னேன். அவர் தான் அந்த 7 நாட்கள் சரியாக இருக்குமென சொன்னார். அதோடு பெருந்தன்மையாக அந்த டைட்டிலை எங்களுக்கு கொடுத்தார். ஆனால் அவருடைய அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் ஒரு சதவிதம் கூட சம்பந்தம் கிடையாது” என்றார்.