/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/127_10.jpg)
தனியார் தொலைக்காட்சியில் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டு அரசியல், இலக்கிய மேடைகளில் பிசியாக இயங்கிவந்த இயக்குநர் கரு.பழனியப்பன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். கடைசியாக அவர் இயக்கிய ஜன்னல் ஓரம் திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான நிலையில், தற்போது புதிய படத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். ஆண்டவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 18ஆம் தேதி வெளியான நிலையில், இப்படத்திற்கான இசையமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகப் படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடல் கம்போஸிங் பணிக்காக யுவன் சங்கர் ராஜா ஸ்டூடியோவிலேயே, தன்னுடைய ஆஸ்தான பாடலாசிரியர் ஒருவருடன் இயக்குநர் கரு.பழனியப்பன் முகாமிட்டிருக்கிறாராம். வழக்கமாக தன்னுடைய படங்களில் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கரு. பழனியப்பன், இந்தப் படத்திலும் பாடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம்.
படம் தொடர்பான அப்டேட்களை அடுத்தடுத்து வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகிவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)