Advertisment

சொந்த டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'அண்டாவ காணோம்'!

hrshg

ப‌ல‌ வெற்றி ப‌ட‌ங்க‌ளை கொடுத்த‌ தயாரிப்பாள‌ர் ஜே.எஸ்.கேவின் 'JSK PRIME MEDIA' டிஜிட்ட‌ல் த‌ள‌ம் இம்மாத‌ம்

Advertisment

ஆகஸ்ட் 28ம் தேதி முத‌ல் அறிமுக‌மாக‌வுள்ளது. இதில் ம‌க்க‌ள் திரும்ப‌ திரும்ப‌ விரும்பி பார்க்க‌ நினைக்கும் சூப்ப‌ர்ஹிட் திரைப்ப‌ட‌ங்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம். அதும‌ட்டுமில்லாது புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும் வெளியாக‌வுள்ள‌ன‌. அப்ப‌டி வெளியாகும் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் க‌ட்ட‌ண‌ம் செலுத்த‌ வேண்டும். அதில் முத‌லாவ‌தாக 'JSK FILM CORPORATION' தயாரிப்பில் அறிமுக‌ இய‌க்குனர் சி.வேல்ம‌தி இய‌க்க‌த்தில் 'அண்டாவ காணோம்' திரைப்ப‌ட‌ம் வெளியாக‌ உள்ள‌து. இத்திரைப்ப‌ட‌ம் முழுக்க‌ முழுக்க‌ கிராம‌த்தை மைய‌மாக‌க்கொண்டு ஒரே நாளில் ந‌ட‌க்கும் ந‌கைச்சுவை க‌லந்த‌ குடும்ப திரைப்ப‌டமாகும். ப‌ட‌த்தில் ஷ்ரேயாரெட்டி க‌தாநாய‌கியாக‌ ந‌டித்துள்ளார்.

Advertisment

இதில் நடித்த 100 கதாபாத்திர‌மும் ஒரு அண்டாவும் நடித்துள்ளது. ஓர் அண்டாவை மைய‌மாக ‌வைத்து காதல், பாசம், காேப‌ம், ந‌கைச்சுவை, பிரிவு, இழப்பு, ஜாதி, ம‌த‌ம், இப்படி ப‌ல்வேறு உணர்வுகளை அண்டாவ காணோம் ஒரே திரைப்ப‌ட‌த்தில் காண‌லாம். இப்ப‌டி அனைவ‌ரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அண்டாவ காணோம் திரைப்ப‌ட‌ம் 'JSK PRIME MEDIA' டிஜிட்டல் த‌ள‌த்தில் வ‌ரும் ஆகஸ்ட் 28ம் தேதி உல‌க‌மெங்கும் வெளியாக‌ உள்ள‌து. இப்ப‌ட‌த்தை தொட‌ர்ந்து Mummy Save Me, Va Deal போன்ற‌ புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும் வெளியாக‌வுள்ள‌ன‌. இதில் திரைப்ப‌ட‌ங்க‌ளை சந்தாதார‌ர் க‌ட்ட‌ண‌மின்றி இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம். புதிதாக‌ வெளியாகும் திரைப்ப‌ட‌ங்க‌ளை ம‌ட்டும் அந்த‌ந்த‌ திரைப்ப‌ட‌ங்க‌ளின் க‌ட்ட‌ணங்க‌ளில் விப‌ந்த‌னைக‌ளுக்குட்ப‌ட்டு பார்க்கலாம். 'Jsk Prime Media App' Smart TV , IOS , Android, Fire Stick, Web Browser எல்லாவ‌ற்றிலும் எளிமையான‌ முறையில் கிடைக்கும்.

vishal shriya reddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe