கடன் தொல்லை... பிரபல தொகுப்பாளர் தற்கொலை!

manmeet

பிரபல ஹிந்தி தொகுப்பாளர் மன்மீட் கிரவால்வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கரோனா பாதிப்பால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப்பலரின் வேலைகள் முடங்கியுள்ளது. அதனால் அவர்களின் வாழ்வாதாராமும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கனவே பண நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த மன்மீட், கடந்த இரண்டு மாதங்களாக எந்தக் கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். அதிக கடன் இருப்பதால் கொஞ்ச நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்தவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் தனது மனைவி இருக்கும்போதே அறையை மூடிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நாற்காலி விழுந்த சத்தத்தைக் கேட்டு, மன்மீட்டின் மனைவி சந்தேகப்பட்டு, அறையைத் திறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மன்மீட் அறையின் உள்ளே தழ்ப்பால் போட்டிருந்ததால் திறக்க முடியவில்லை. அக்கம்பக்கத்தினரிடம் உதவிக்கு அழைத்தும், கரோனாவின் அச்சத்தால் யாரும் வரவில்லை என்று வட இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

lockdown
இதையும் படியுங்கள்
Subscribe