/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/48_13.jpg)
சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன், 90களின் காலத்தில் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறியப்பட்டார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றிய இவர், விஜய், அசின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை நேர்காணல் செய்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த ஆனந்த கண்ணன் உரிய சிகிச்சை எடுத்துவந்தார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவர் மரணமடைந்தார். திரைத்துறை பிரபலங்கள் பலரோடு நல்ல நட்புறவைக் கொண்டிருந்த ஆனந்த கண்ணனின் திடீர் மரணம் திரைத்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்குஇரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)