மோகன்.ஜியின் ‘பகாசூரன்’ படம் குறித்து அன்புமணி ராமதாஸ் பதிவு

Anbumani Ramdoss post about Mohan g film bakasuran

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மைக்கதாபாத்திரங்களில் நடித்த 'பகாசூரன்' படம் நேற்று (17.02.2023) திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பகாசூரன் படம் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் இயக்குனர் மோகன்.ஜி, இயக்குனர் - நடிகர் செல்வராகவன் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். சமூக அக்கறை கொண்ட பகாசூரன் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மோகன்.ஜியின் முந்தைய படங்களான 'திரௌபதி' மற்றும் 'ருத்ர தாண்டவம்' படங்களும்சர்ச்சையை கிளப்பின. இதில் திரௌபதி படம் பாமகவின் அறிக்கையை வைத்து உருவானதாக மோகன்.ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

anbumani ramadoss mohan g
இதையும் படியுங்கள்
Subscribe