தனுஷ்,ஹாலிவுட்டில்நடித்த 'திகிரேமேன்’ படம் சமீபத்தில் நேரடியாகஓடிடி-யில்வெளியானது. 'அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியரூசோபிரதர்ஸ்இயக்கியுள்ள இப்படத்தில்கிறிஸ்ஈவான்ஸ்,ரயன்காஸ்லிங்உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2009-ல் வெளியான 'திகிரேமேன்' என்றநாவலைதழுவி அதே தலைப்பில் எடுக்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் பா.ம.க தலைவர் அன்புமணி 'திகிரேமேன்’படத்தைபார்த்துபாராட்டியுள்ளார். இது தொடர்பான தனதுட்விட்டர்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று 'திகிரேமேன்’திரைப்படத்தைபார்த்து மகிழ்ந்தேன்.ஹாலிவுட்படத்தில் நடித்ததற்காகதனுஷைநினைத்துபெருமைப்படுகிறேன்.தனுஷின்எதிர்கால முயற்சிகளுக்கும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு இன்னும் பல விருதுகளை அவர் கொண்டு வர எனது வாழ்த்துக்கள்."எனக்குறிப்பிட்டுள்ளார்.
Enjoyed watching the movie #TheGrayMan yesterday. Felt proud about Actor @dhanushkraja, acting in a Hollywood movie. My best wishes to Actor Dhanush in all his future endeavours & to bring more laurels to TN & India. @Russo_Brothers
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 23, 2022