Advertisment

"அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்" - அன்புமணி பரிந்துரை

anbumani ramadoss  about Karumegangal Kalaiginrana and Thankar Bachan

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா, கவுதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தை வீரசக்தி தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பாடல்களுக்கு வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இப்படத்தை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது குடும்பத்துடன் பார்த்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பக்கத்தில், "இயக்குநர் தங்கர்பச்சான் படைத்திருக்கும் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தை பார்த்தேன்; ரசித்தேன். இப்போது வெளியாகும் படங்கள் கோரம், ரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம், இரட்டைப் பொருள் தரும் வசனங்களால் நிறைந்துள்ள நிலையில், இந்தத் திரைப்படம் குடும்ப உறவுகளின் மகிமை, பாசம், கலாச்சாரம் ஆகியவற்றை பேசுகிறது.

Advertisment

இந்தத் திரைப்படத்தை பொதுமக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டும். இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.பி. உதயகுமார், நடிகர் யோகிபாபு ஆகியோர் அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர்.அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது" என குறிப்பிட்டுள்ளார். இதற்கு இயக்குநர் தங்கர் பச்சான் எக்ஸ் தளபக்கத்தில் அன்புமணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

anbumani ramadoss Thankar Bachan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe