anbumani daughter sangamithra debut as producer in cinema

பா.ம.க. தலைவர் அன்புமணி - செளமியா அன்புமணி தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் இருக்கின்றனர். மூன்று பேரும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வேட்பாளராக நின்ற செளமியா அன்புமணிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த நிலையில் அன்புமணியின் இரண்டாவது மகளான சங்கமித்ரா தற்போது சினிமா தயாரிப்பாளராக அறிமுகமாகவுள்ளார். அலங்கு என்ற தலைப்பில் எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தை டிஜி ஃபிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து மேக்னஸ் புரொடைக்‌ஷன் என்ற பெயரில் தயாரித்துள்ளார். இதில் குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Advertisment

இப்படம் ஒரு நாயிக்கும் மனிதருக்கும் இடையிலான உறவை தமிழக - கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் புலம்பெயர்ந்த பழங்குடியினரின் பின்னணியில் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்றபடியே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. பின்பு வெளியான ‘காளியம்மா’, ‘கொங்கு சாங்’ஆகிய பாடல்களும் தமிழக, கேரள எல்லை பகுதிகளில் படமாக்கப்பட்டதாக அமைந்திருந்தது. இந்தப் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.