Advertisment

பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கை தொடங்கிய அன்புசெழியனின் மகள்!

Advertisment

anbu chezhiyan daughter

Advertisment

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான G.N.அன்புசெழியனின் மகள் சுஸ்மிதா அன்புசெழியன். இவர் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர்.

தீபாவளி அன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” மதுரை மல்டிபிளக்ஸை திறந்து வைத்தார்.

இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீண்ட வரலாறு பொருந்திய ராஜ் திரையரங்கத்தையும் ஆறு திரைகள் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டராக மாற்ற முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மதுரை மக்களுக்கு நல்ல படம் பார்க்கும் அனுபவத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதும், எங்கள் மல்டிபிளக்ஸ்ற்குள் வருபவர்களுக்கு நல்ல பாதுகாப்பையும், தரமான உணவையும் கொடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் தூய்மையான சூழ்நிலையையும் உருவாக்கி தருவதே எங்களுடைய மகத்தான நோக்கமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

anbu chezhiyan
இதையும் படியுங்கள்
Subscribe