'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், ஹிப்ஹாப் ஆதி 'அன்பறிவு' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். நடிகர் நெப்போலியன், விதார்த், காஷ்மிரா உள்ளிட்ட பலரும் முக்கியக்கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது இன்று வெளியிடப்பட்டுள்ளது.