Advertisment

“அட்லீயிடமிருந்தும் அதை கற்றுக்கொண்டேன்” - 'அன்பறிவு' இயக்குநர் அஸ்வின் ராம் பேட்டி 

Aswin Raam

அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மீரா பர்தேஷி, நெப்போலியன், விதார்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அன்பறிவு திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் அஸ்வின் ராமை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில், இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

"அட்லீ எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். நான் ராஜாராணி படத்தில் அவருடன் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அவர்கூட நான் செலவழித்த நேரங்களில் நிறைய கற்றுக்கொண்டேன். இத்தனை நடிகர்கள் உள்ள ஒரு பெரிய படத்தை அறிமுக இயக்குநராக சிறப்பாக கையாண்டீர்கள் என்று சிலர் சொன்னார்கள். அதை நான் அவரிடம் இருந்தும் கற்றுக்கொண்டேன். அவர் களைப்பே அடையாமல் வேலை பார்க்கக்கூடியவர். 24 மணி நேரமும் தூக்கத்திலும்கூட நம் படம் எல்லாரையும் சென்றுசேர வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருப்பார்".

Advertisment

atlee hiphop adhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe