“குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட...’ - மெய்யழகன் படம் குறித்து அன்புமணி

anbamani ramadoss about meiyazhagan

96 பட இயக்குநர் ச.பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ள இப்படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்சினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இதையொட்டி படத்தின் நீளத்தை 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதி னெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இதில் நீக்கப்பட்ட காட்சிகளுடனே வெளியானது. அதன் பிறகு பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது எக்ஸ் பக்கம் வாயிலாக படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், “ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் சிறந்த படம்.

எனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டுவந்த படம். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் சி.பிரேம்குமார் பார்வையாளர்களை உறவுக்கூட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். இந்த ஃபீல் குட் படம் மிகவும் நன்றாக இருந்தது” என்றார்.

actor karthi anbumani ramadoss arvindh swamy Prem Kumar
இதையும் படியுங்கள்
Subscribe