தனுஷை இந்தியில் அறிமுகம் செய்த இயக்குநருடன் கைகோர்க்கும் அனிருத்?

anirudh

நடிகர் தனுஷை பாலிவுட் திரையுலகில் அறிமுகம் செய்தவர் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநரான இவர், தற்போது அத்ராங்கி ரே என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலிகான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத்துடன் தனது அடுத்த படத்திற்காக ஆனந்த் எல்.ராய் கைகோர்க்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆனந்த் எல்.ராய்யே தயாரிக்கவுள்ளார்.

பிரபல செஸ் வீரர் விஸ்வநாத ஆனந்தின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கும் முயற்சியில் ஆனந்த் எல்.ராய் இருப்பதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், இந்தப்படத்திற்குத்தான் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அத்ராங்கி ரே திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டும் போதோ அல்லது பட வெளியீட்டிற்கு பிறகோ வெளியாகலாம்.

anirudh
இதையும் படியுங்கள்
Subscribe