பரபரக்கும் படப்பிடிப்பில் கௌதம் கார்த்திக், சேரன்!

vdsbdsdbgsdgsdrgbsd

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. ஶ்ரீவாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார். 'சிவப்பு மஞ்சள் பச்சை' புகழ் சித்துகுமார் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக ஷிவத்மிகா ராஜசேகர் நடிக்கிறார். மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நடச்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் கூறும்போது....

“ஆனந்தம் விளையாடும் வீடு” படம் உருவாகி வரும் விதம், மனதிற்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி கதையை என்னிடம் கூறியது போலவே படத்தையும் மிக அழகாகச் செதுக்கி வருகிறார். குறிப்பாக சேரன் மற்றும் கௌதம் கார்த்திக் பங்குபெறும் காட்சிகள் மிக அற்புதமாக உருவாகியுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திண்டுக்கல் பகுதியில் துவங்கியுள்ளோம். குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைப்படத்தில், பல பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதும், படப்பிடிப்பில் குடும்ப உறவைகளைப் போலவே பழகுவதும் மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. திண்டுக்கல் மக்களும் தங்கள் குடும்பத்தினரை போலவே படக்குழுவைக் கொண்டாடியது படத்தினை திரையரங்கிலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எனும் நம்பிக்கையைக் கூட்டியுள்ளது. பொதுமுடக்கம் முற்றிலும் நீங்கிய பிறகு செண்டிமெண்ட், காமெடி, ஆக்சன் பொழுதுபோக்கு அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக ரசிகர்களுக்கு இப்படத்தை தரவிருக்கிறோம்" என்றார்.

cheran
இதையும் படியுங்கள்
Subscribe