Skip to main content

பரபரக்கும் படப்பிடிப்பில் கௌதம் கார்த்திக், சேரன்!

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

vdsbdsdbgsdgsdrgbsd

 

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. ஶ்ரீவாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார். 'சிவப்பு மஞ்சள் பச்சை' புகழ் சித்துகுமார் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக ஷிவத்மிகா  ராஜசேகர் நடிக்கிறார். மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நடச்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் கூறும்போது....

 

“ஆனந்தம் விளையாடும் வீடு” படம் உருவாகி வரும் விதம், மனதிற்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி கதையை என்னிடம் கூறியது போலவே படத்தையும் மிக அழகாகச் செதுக்கி வருகிறார். குறிப்பாக சேரன் மற்றும் கௌதம் கார்த்திக் பங்குபெறும் காட்சிகள் மிக அற்புதமாக உருவாகியுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திண்டுக்கல் பகுதியில் துவங்கியுள்ளோம். குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைப்படத்தில், பல பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதும், படப்பிடிப்பில் குடும்ப உறவைகளைப் போலவே பழகுவதும் மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. திண்டுக்கல் மக்களும் தங்கள் குடும்பத்தினரை போலவே படக்குழுவைக் கொண்டாடியது படத்தினை திரையரங்கிலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எனும் நம்பிக்கையைக் கூட்டியுள்ளது. பொதுமுடக்கம் முற்றிலும் நீங்கிய பிறகு செண்டிமெண்ட், காமெடி, ஆக்சன் பொழுதுபோக்கு அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக ரசிகர்களுக்கு இப்படத்தை தரவிருக்கிறோம்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.