Advertisment

“அவர்களைப் பின்பற்றினால் இந்தியா வல்லரசாகும்...” - ஹிட் பட பிரபலங்களுடன் ஆனந்த் மஹிந்த்ரா

anand mahindra about 12th fail movie

விது வினோத் சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் வி ஜோஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 12த் ஃபெயில். தமிழ், இந்தி, தெலுங்குமற்றும் கன்னடா மொழிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இக்கதை மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவிஷ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ்ஸின்வாழ்க்கையைத்தழுவி எடுக்கப்பட்டது. பின்பு கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஓடிடியில் இப்படம் வெளியானது. அதன் பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இந்த நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இப்படத்தின் மூலம் பிரபலமான நிஜ தம்பதிகள்மனோஜ்குமார் ஷர்மாஐபிஎஸ் மற்றும்அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ் உள்ளிட்டோரை சந்தித்து ஆட்டோகிராஃப் பெற்றுள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் பெருமையுடன் வைத்திருக்கும் அவர்களின் ஆட்டோகிராஃப்களை, நான் அவர்களிடம் கேட்டபோது வெட்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள்தான் உண்மையானஹீரோக்கள்.

Advertisment

படத்தின் கதை அவர்களின் உண்மைக் கதையை தழுவியதாக அறிந்தேன். அவர்கள் நேர்மையான ஒருமைப்பாட்டு தத்துவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். இந்தியா உலக வல்லரசாக மாற வேண்டுமானால், அதிகமான மக்கள் அவர்களின்வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் அது வேகமாக நடக்கும். எனவே அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான பிரபலங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bollywood ANAND MAHINDRA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe