/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/l-rai.jpg)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தாமேனன் நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தமிழிலும், தெலுங்கிலும்வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்'என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
'வாத்தி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தனுஷ் அடுத்ததாக இரண்டு இந்தி படங்களில் நடிக்கவுள்ளதாகத்தகவல்வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தனுஷ் மற்றும் ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் வெளியான ராஞ்சனா மற்றும் 'அத்ராங்கி ரே'( கலாட்டா கல்யாணம்) ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவதுமுறையாக இணையவுள்ளது. இதனைத்தொடர்ந்து பிரபல இந்தி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திலும்நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)