
'காக்கா முட்டை' படத்திற்கு வசனம் எழுதியதற்காக பல விருதுகளை குவித்தவர் ஆனந்த் அண்ணாமலை. 'குற்றம் தண்டனை' படத்தில் மணிகண்டனுடன் திரைக்கதை எழுதினார். இதுதவிர பல நாவல்களை எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளரான இவர், மைத்திரி மூவி மேக்கர்ஸ்-ன் ஒன்பதாவது தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, 'ஹீரோ' என்ற படத்தை இயக்குகிறார். நேரடி தமிழ் படமாக உருவாகும் 'ஹீரோ' அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும். 'பாகுபலி', 'கே.ஜி.எஃப்' பாணியில் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புதுதில்லியில் ஆரம்பமாகிறது. இப்படத்தின் கதாநாயகியாக 'பேட்ட' படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். 'காலா', 'கபாலி' புகழ் முரளி ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகவுள்ளது.