தமிழ், இந்தி படங்களில் நடித்து வந்த ஏமி ஜாக்சன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. அவர் இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழில் அதிபரின் மகன் ஜார்ஜை அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளார். 33 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் ஏமி ஜாக்சன் தன் வயிறு பெரிதாக இருப்பதால் அதை துணியை போட்டு மூடி மறைக்க விரும்பவில்லை. இதுவும் ஒரு அழகு, இதுவும் ஒரு தனி அனுபவம் என்று பெருமையுடன் தனது பெரிய வயிறை காட்டுகிறார்.

கர்ப்பமாக இருப்பதால் ஏமியின் உடல் எடை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அவர் தன் உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் பார்த்து பயப்படாமல் தைரியமாக உள்ளார். கர்ப்பமான பிறகும் ஏமி தனது வருங்கால கணவர் ஜார்ஜுடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏமியின் டாப்லெஸ் புகைப்படத்தை பார்த்து இதுவரை யாரும் அவரை கிண்டல் செய்யவில்லை. மாறாக அவரை பத்திரமாக இருங்கள் ஏமி என்று அறிவுரை வழங்கியுள்ளனர். குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்துவிட்டு மீண்டும் படங்கள், ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் திட்டம் வைத்துள்ளதாக ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார்.