Amy Jackson gets engaged to Ed Westwick

மதராசபட்டினம், தாண்டவம், ஐ, தெறிஉள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான எமி ஜாக்சன் ரஜினியின் 2.0 படத்திற்குப் பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகுபொங்கலை முன்னிட்டு வெளியான அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

இதனிடையே 2019 ஆம் ஆண்டு ஜார்ஜ் பனாயிடோவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர்களுக்கு அதே ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. பின்பு திருமணம் செய்து கொள்ளாமலே சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து 2021லிருந்து ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன்டேட்டிங் செய்து வந்ததாகத்தகவல் வெளியானது. பின்பு 2022 ஆம் ஆண்டு இருவரும் காதலை உறுதி செய்தனர்.

Advertisment

இந்த நிலையில், ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் எமி ஜாக்சனிடம் நிச்சயதார்த்தத்திற்காகமோதிரம் நீட்டி ப்ரோபோஸ் செய்துள்ளார். அவரது ப்ரோபோஸலை ஏற்றுக்கொண்ட எமி, அவர் கொடுத்த மோதிரத்தை வாங்கி கையில் அணிந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் எமி ஜாக்சன். அந்த பதிவிற்கு கீழ் நடிகை கியாரா அத்வானி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.