
'பீட்ரு' படத்தில் கதாநாயகராக நடிப்பதோடு, தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கும் மறைந்த "காதலிக்க நேரமில்லை" ரவிச்சந்திரனின் கலையுலக வாரிசு அம்சவர்தன் காஷ்மீர் - புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் படை ( சி ஆர் பி எப்) வீரர்கள் இருவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து தலா இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவி செய்யதுள்ளார். அம்சவர்தன், முதற்கட்டமாக நேற்று, தூத்துக்குடி சவலாப்பேரி பகுதியை சேர்ந்த, மறைந்த மத்திய ரிசர்வ் படை வீரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை தனது சொந்த வங்கி கணக்கில் இருந்து நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறியுள்ளார். இன்று அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சார்ந்த இந்திய அதிவிரைவு காவல் படை ( சி ஆர் பி எப்) வீரர் சிவச்சந்திரனின் குடும்பத்தினரிடமும் நேரில் சென்று தன் சார்பில் , இரண்டு லட்சத்திற்கான காசோலையை வழங்கி, அந்த வீரரின் குடும்பத்தினருக்கும் ஆறுதலும் கூற உள்ளார்.