Skip to main content

விஜய் ஆண்டனி என் தோழர்... நெகிழும் நடிகை! 

Published on 02/04/2018 | Edited on 03/04/2018
amritha


விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்த படை வீரன் படத்தின் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் புதுமுக நடிகை அம்ரிதா. இவருடைய குறு குறு பார்வையும், துரு துரு நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தற்போது விஜய் ஆண்டனியின் காளி படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்கிறார். இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து அம்ரிதா பேசும்போது...."விஜய் ஆண்டனி சாரின் இசையையும், அவரது நடிப்பையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். மிகப்பெரிய உயரங்களை தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். படப்பிடிப்பில் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார், நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பை பாராட்ட அவர் தவறியதே இல்லை. அது எனக்கு ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாக அமைந்து என்னை இன்னும் மெறுகேற்றிக் கொள்ள உதவியாக இருந்தது. குறிப்பாக நான் மிகவும் பதட்டப்படும் நெருக்கமான காதல் காட்சிகளில் நன்றாக பயமில்லாமல் நடிக்க உதவுவார்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

நன்றி மறவாதவர் விஜய் ஆண்டனி - பிரபல நடிகர் நெகிழ்ச்சி

Published on 15/05/2018 | Edited on 16/05/2018
irumbu thirai.jpeg

 

 

vijay antony


அண்ணாதுரை படத்தையடுத்து நடிகர் விஜய் ஆண்டனி தான் சொந்தமாக தயாரித்து நடித்துக்கொண்டிருக்கும் படம்  'காளி'. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

 

 


மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பேசுகையில்...."நான் ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் 'தர்மதுரை' படமும், விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' படமும் லாபத்தில் ஓவர் ப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். கிருத்திகாவை பார்த்து பிரமித்தேன். கதையில் என்ன வேணுமோ அதை மட்டுமே எடுத்தார். மேலும் படத்தில் நன்றாக நடிக்கக் கூடியவர்களாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். காளி என்றாலே ரொம்ப பவர் புல்லான தலைப்பு" என்றார்.