/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/428_12.jpg)
‘சித்தா’ பட வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சித்தார்த். இதையடுத்து என்.ராஜசேகர் இயக்கத்தில் ‘மிஸ் யூ’ படத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில், சித்தார்த்தின் அடுத்த படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கனேஷ் இயக்குகிறார். இப்படம் சித்தார்த்தின் 40வது படமாக உருவாகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத்தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவர் இதற்கு முன்னாடி மலையாள வெற்றி படமான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்திருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)