
விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி கூட்டணியில் உருவான 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இப்பாடலை பாடப் பட்ட போதே இவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டார் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் T.சிவா. இதைத்தொடர்ந்து இவர் தற்போது தயாரிக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தில் இப்பாடலை 'மொட்ட சிவா கெட்ட சிவா' புகழ் அம்ரீஷ் இசையில் உபயோகப்படுத்தியுள்ளது உலகம் முழுவதும் பாப்புலராகி யூடியூபில் இதுவரை சுமார் 60 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் கண்டு களித்து ஹிட்டடித்துள்ளது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும் போது...
"இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா சார், இயக்குனர் ஷக்திசிதம்பரம் சார், பிரபுதேவா சார் ஆகியோருக்கும் இந்த பாடலை ட்விட் மூலம் மேலும் பாப்புலராக்கிய திரு.தனுஷ் சாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரபு தேவா சார் எவ்வளவோ டியூனுக்கு வித விதமான டான்ஸ் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் தற்போது சின்ன மச்சான் பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன். எனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மூலம் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் மூலமாகவும், பிரபுதேவா சாரின் 'சார்லி சாப்ளின் 2' மூலமும் எனக்கு கிடைத்திருக்கிறது எனும்போது பெருமையாக இருக்கிறது. மிகப் பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே. அடுத்து சார்லி சாப்ளின் 2 படத்தில் இன்னும் 4 பாடல்கள் இருக்கு. அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்று நம்பறேன்" என்றார். பிரபுதேவா - நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார்.