gvesgse

ரேகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'வெட்டி பசங்க' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இசையாமைப்பாளர் அம்ரிஷ் பேசும்போது...

Advertisment

"கடந்த வருடம் எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்தது. நிறைய இழப்புகளை சந்தித்திருப்போம். நான் எனது தந்தையை இழந்தேன். மாஸ்டர் திரையரங்குகளில் நுழைந்ததும் கரோனா வெளியே சென்று விட்டது. ஒரு படம், இரண்டு படம் இசையமைத்து விட்டாலே நாங்கள் தாமதமாக வருவோம். ஆனால் மலையாளத்தில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்து விட்டு இங்கு மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கும் இசையமைப்பாளர் வி.தஷியை வாழ்த்துகிறேன். அவரை நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன்" என்றார்.