Ammu Abhirami

Advertisment

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

இந்த நிலையில், ‘அசுரன்’ படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகை அம்மு அபிராமிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து, எனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை எடுத்துவருகிறேன். அனைவரும் அதிக கவனம் எடுத்து பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.