/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/78_61.jpg)
கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கேஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது.
இதையொட்டி நக்கீரன் ஸ்டுடியோவிற்கு படத்தில் நடித்த கலையரசன், சோபியா, அம்மு அபிராமி, சுபாஷ் ஆகியோர் நேர்காணல் கொடுத்திருந்தார்கள். அப்போது அம்மு அபிராபியிடம் “தான் ஒரு தன்பாலீன ஈர்ப்பாளர்” என அவர் பேசிய வசனம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இப்போது உலகத்தில் எல்லோரும் முற்போக்கை நோக்கி போக ஆரம்பிச்சுட்டோம். காதல் என்பது காதல்தான். அது உண்மையாக இருந்தால் போதும். குறிப்பிட்ட பாலினத்தவரை பார்த்துத்தான் வர வேண்டும் என்றெல்லாம் கிடையாது. அந்த வசனத்தை பேசியதற்காக எந்த விதத்திலும் நான் வெட்கப்படவில்லை. அது ஒன்றும் தவறும் கிடையாது” என்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)